ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

Monday, 12 September 2016

6ம் திருவிழா

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவத்தின் 6ம் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. மாம்பழத் திருவிழாவாகிய இந்தத் தினத்திலே அன்னை தந்தையே உலகம் என்னும் தத்துவத்தினை கலைஞர்கள் நாடகம் மூலம் நடத்திக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.




5ம் திருவிழா

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவத்தின் 5ம் திருவிழா வெகுசிறப்பாக இடம்பெற்றது. கற்பகத் திருவிழாவாகிய இந்தத் தினத்திலே எம்பெருமான் நாணயத்தாள்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தது குறிப்பிடத்தக்கது.







Thursday, 8 September 2016

முதலாம் திருவிழா .07.09.2016 அன்று கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமானது

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் முதலாம் திருவிழா  .07.09.2016 அன்று கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமானது  இதற்கான கொடித்தம்பத்தை உபயமாக  மரையடித்தகுளத்தைச்சேர்ந்த சின்னத்தம்பி குமாரசாமி ஆசிரியர் குடும்பத்தினர் உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள். 

Wednesday, 31 August 2016

சேமமடு முதலாம் படிவத்தைச் சேர்ந்த 
பிரித்தானியாவில் வசிக்கும் செல்வராசா சுகுமார் அவர்களால் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிஆலயத்திற்கென உபயமாக நிர்மாணிக்கப்பட்ட "அமுதசுரபி எனும்" அன்னதானமடத் திறப்புவிழா.
"அமுதசுரபி எனும்" அன்னதானமடத் திறப்புவிழா.









31-08-2016 அன்றுஅன்னதானமடத்தின் சாந்திபூசை நிகழ்வு